...
செய்திகள்

ஹேவா லுனுவிலகே லசந்த பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஹேவா லுனுவிலகே லசந்த, இன்று அதிகாலை களுத்துறை, தியகம பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபருக்குச் சொந்தமான கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றைத் தேடிச் சென்ற போது சந்தேக நபர் குறித்த கைத்துப்பாக்கியால் பொலிஸாரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில், பொலிஸாரின் பதில் தாக்குதலில் குறித்த சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவத்தில் 2 பொலிஸார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், களுத்துறை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் இருவரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பலியான நபர் ஷன்சைன் சுத்தாவின் கொலை உள்ளிட்ட மேலும் பல படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen