மலையகம்

ஹைலண்ட்ஸ் கல்லூரியின் முதலாவது பட்டதாரி தி.வே.மாரிமுத்து.

வட்டகொட தோட்டப் பாடசாலையில் தனது ஆரம்ப கல்வியை ஆரம்பித்த மாரிமுத்து சேர், சுமன வித்தியாலயத்திலும், பின்பு ஹைலண்ட்ஸ் கல்லூரியிலும் தொடர்ந்து, அக்கல்லூரியில் இருந்து பேராதெனிய பல்கலைக்கழகத்திற்குச் சென்ற முதல் மாணவராவார்,ஹாவட் கல்லூரி, மதுரை தியாகராஜா கல்லூரி போன்றவற்றிலும் தனது உயர்கல்வியை தொடர்ந்த இவர் டாக்டர் சு.வித்தியானந்தன், டாக்டர்.செல்வநாயகம், டாக்டர் சதாசிவம் போன்றவர்களின் மாணவரும், பேரா. க.கைலாசபதி, பேரா.கா.சிவத்தம்பி, பாஸ்கரலிங்கம், தேச நேசன் ஆகியோரோடு பேரதெனிய பல்கலைக்கழகத்தில் ( அப்போது இலங்கை பல்கலைக்கழகம்) சமகாலத்தில் கல்வி கற்றவராவார்.

ஹைலண்ட்ஸ் கல்லூரி, நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும்,புஸ்ஸலாவ சரஸ்வதி கல்லூரி, நு/ ஹொலி ட்ரிண்டி கல்லூரி போன்றவற்றில் அதிபராகவும் பணியாற்றி, நுவரெலியா வட்டார கல்வி அதிகாரியாக (C.E.O) வும் பணியாற்றியுள்ளார்.

நன்றி -லுணுகல ஸ்ரீ

Related Articles

Back to top button