உலகம்

ஹொங்கொங்கில் கல்வி நிலையங்கள் மூடல்

ஹொங்கொங்கில் பாதுகாப்புத் தொடர்பாக ஏற்பட்டுள்ள அச்சத்தினால் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பன மூடப்பட்டுள்ளன.

போக்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தி மற்றுமொரு தினத்திலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாமென்ற அச்சத்தினால், இன்றையதினமும் சில பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஹொங்கொங் பிராந்தியத்தின் பல்வேறு ரயில் மார்க்கங்களின் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக அல்லது தாமதமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளை பொலிஸார் சோதனைக்குட்படுத்துவதுடன், ரயில் நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download