நிகழ்வுகள்

ஹொரண மில்லனிய முகப்பட்டி தோட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு..

ஹொரண மில்லனிய முகப்பட்டி தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு கடந்த 02 /04/2021 அன்று இடம்பெற்றது.

நிகழ்வை மத்துகம மத்தியஸ்த சபை உறுப்பினரும் ஆசிரியரும் சமூக சேவையாளருமான கே.கே.கனகர் ஒழுங்கமைத்திருந்தார்.

நிகழ்வில் லயன்ஸ் கழகத்தை சேர்ந்த (306-B 2) பல முக்கியஸ்த்தர்களான பாலசுப்பிரமணியம் , தலைவர் திரு. எஸ் .குகராஜா (தலைவர் ) உட்பட உறுப்பினர்களான வி .பாஸ்கரன், எஸ் .மனோகரன் ,என் .கனேஷலிங்கம்,வர்த்தக பிரமுகர் வி.ஞானசேகரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த நாளில் கனேஷலிங்கம் அவர்களினால் தோட்ட மக்கள் அனைவருக்கும் பகல் உணவும் வழங்கப்பட்டதோடு அதற்கான ஏற்பாடுகளை அறநெறி பாடசாலை ஆசிரியை செல்வி அகிலா பிரியதர்சினி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button