செய்திகள்

ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில், தப்பிச் செல்ல முற்பட்ட சந்தேகநபர் மீது துப்பாக்கி பிரயோகம்.?

ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில், தப்பிச் செல்ல முற்பட்ட சந்தேகநபர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர், நீதிமன்ற வளாகத்திற்குள் சிறைச்சாலைகள் பஸ்ஸிலிருந்து இறங்கும் போது தப்பிச் செல்ல முற்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டி.எம்.ஜே.டப்ள்யூ.தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சந்தேநபரின் பாதத்திற்கு பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

காயமடைந்த சந்தேகநபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், ஆயுட் தண்டனை பெற்று வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

குறித்த கைதி, கொள்ளைச்சம்பவமொன்று தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

Related Articles

Back to top button