சமூகம்மலையகம்

ஹோல்புருக் பொது மைதானத்தை தாமாக முன் வந்து சுத்தம் செய்த இளைஞர்கள் !

கோல்புரூக் கிரன்லி யூத் கெமரரி இளைஞர் அமைப்பு ஹோல்ப்ரூக் பொது மைதானத்தில் சிரமதானத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சிரமதான வேலை திட்டம் கடந்த 19/01/2019 அன்று இடம்பெற்றுள்ளது.

ஹோல்புரூக் மற்றும் அதனை சூழ உள்ள இளைஞர்கள் பயன் படுத்தும் குறித்த பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பொது மைதானமானது கடந்த சில காலங்களாக காடாகி விளையாடுவதற்கு உகந்த நிலையில் இல்லாமல் காணப்பட்டது .

எனவே இந்த நிலையை கண்ட கோல்புரூக் கிரன்லி யூத் கெமரரி இளைஞர் அமைப்பு தாமாகவே முன் வந்து மைதானத்தை சுத்தப்படுத்தி மைதானத்தை பழைய நிலைக்கு கொண்டுவந்திருக்கின்றார்கள்.

இவ்வாறு பல பொது மைதானங்கள் மலையகத்தில் கவனிக்கப்படாமல் காடுகலாகும் நிலை இன்று காணப்படுகின்றது. சம்பந்த பட்ட நகர சபைகளும் ,பிரதேச சபைகளும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

மேலும் தொடர்ந்தும் இது போன்ற சமூக அபிவிருத்தி வேலை திட்டங்களை செய்ய மலையகம் .lk இணைய குழுமம் கோல்புரூக் கிரன்லி யூத் கெமரரி இளைஞர் அமைப்புக்கு வாழ்த்துக்களையும் ,பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com