மலையக பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் நுவரெலிய கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறூக் கோட்டம் (Zonal) 2,3 ஆகியவற்றுக்கான டுப்ளோ(Duplo) இயந்திரமொன்று இன்று கனடாவில் வசிக்கும் பெரியசாமி பாலேந்திரா அவர்களின் நன்கொடையின் கீழ் இன்று(1/12) அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

இது தொடர்பில் ,பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்ற அரிய அன்பளிப்பாக இதனை கருதுவதாக ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலய அதிபர் ஜெயராம் தெரிவித்தார்.மேலும் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக நுவரெலிய வலய கல்வி பணிப்பாளர் எம்.ஜி.ஏ.பியதாச கலந்து கொண்டதுடன் அனுசரணையாளர்களாக மஞ்சுள சுமந்த சில்வா மற்றும் சுதர்ஷினி மஞ்சுள ஆகியோரும், கோட்ட கல்வி பணிப்பாளர்களான எஸ்.ஜெகதீஸ்வரன் மற்றும் ஏ.ஹரிச்சந்திரன் அபிவிருத்தி கல்வி பணிப்பாளர் எம்.கனேஸ்ராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
சங்கீதா