செய்திகள்

ஹோல்ப்புரூக் விஞ்ஞான கல்லூரி பழைய மாணவர்களின் புதிய பயணம்

ஹோல்ப்புரூக் விஞ்ஞான கல்லூரியின் 2019ம் ஆண்டுக்கான  முதலாவது பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்  அதிபர் திரு.ஜெயராமன்  தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் 04/02/2019 அன்று  காலை 11மணிக்கு  கூடியது.
இறை வணக்கத்தோடு ஆரம்பமான கூட்டத்தில் முதலாவது தலைமை உரையில்  அதிபர் பல முக்கிய விடயங்களை பகிர்ந்துகொண்டார்.
ஒரு பாடசாலையின் பழைய பழைய மாணவர்களின் பங்குளிப்பு எப்படி பட்டது என்பதை விபரித்ததோடு தொடர்ந்தும் எப்பொழுதுமே பழையமாணவர்களின் பங்களிப்பு இந்த பாடசாலைக்கு இருக்கவேண்டும்   நானும் இந்த பாடசாலையின்  பழையமாணவர்  என்பதையும் சுட்டி காட்டினார்.
மேலும், தான் பாடசாலையை பொறுப்பேற்றதன் பின்னர் பாடசாலையின் பெறுபேறுகள் நல்ல அடைவுமட்டத்தில்  இருப்பதையும் இங்கே நினைவுபடுத்தினார்.
இதனை தொடர்ந்து  பழையமாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் தொடர்ந்தும் அவர் பதில் அளித்தார்.
செயலாளர் தனபாலசிங்கத்தினால் அறிக்கைவாசிகப்பட்ட பின்னர் சில கருத்துக்களை  பகிர்ந்துகொண்டார்.
அங்கு , அங்கு குழுவாக இயங்கும் பழையமாணவர்கள்  ஒன்றாக இணைந்து உத்தியோக பூர்வ பாடசாலையின் பழையமாணவர்  சங்கத்தோடு இணைந்து பயணிக்க  வேண்டும்  என்பதோடு பாடசாலையின் நன்மதிப்பையும் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும்  குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் பழையமாணவர் சங்க  பொருலாளர் சசிதரன் கணக்கறிக்கையை வாசித்து உறையாற்றினார் பாடசாலையின் அபிவிருத்திக்கும் ,பாடசாலை வளாகத்தில் அமைந்துந்து கொண்டிருக்கும்  கோவிலில் பழையமாணவர்களின் பங்களிப்பு தொடர்பிலும் ஞாபகம் மூட்டினார்.
பிரதி அதிபர்  லிங்கேஸ்வரன் பேசும்பொழுது பழையமாண வர்களின் இந்த தொடர்பை  இன்னும்  மேம்படுத்தி மிக பெரும் சக்தியாக பாடசாலைக்கு இருக்கவேண்டும் என்று குறிப்பிட ,பாடசாலை அபிவிருத்தி  சங்க செயலாளர் பேசும் பொழுது பழைய மாணவர்கள் மூலம் தொழில் வாய்ப்பு மற்றும் உயர்கல்வி தொடர்பில் உதவிகளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்று  குறிப்பிட்டார்.
மேலும் வந்திருந்த  பழையமாணவர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டானர்.
இறுதியாக உப பொருலாளர் மனோகரனின் நன்றி  உரையோடு இனிதே  2019ம் ஆண்டுக்கான  ஹோல்ப்புரூக் விஞ்ஞான கல்லூரியின் பழையமாணவர் சங்க  பொது கூட்டம் நிறைவுபெற்றது.

Related Articles

61 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button