செய்திகள்

​மெனிங் சந்தை ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

மெனிங் சந்தை ஊழியர்களில் இதுவரை PCR பரிசோதனைகளை மேற்கொள்ளாத ஊழியர்கள்
இருப்பின், அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.

குறித்த ஊழியர்கள் தமது பெயர், முகவரி மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை
0718 591 555
0718 591 551
0718 591 554 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அனுப்புமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு மெனிங் சந்தை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடமையாற்றும்
அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் நேற்று மாலை
அறிவித்திருந்தனர்.

இந்த பின்புலத்தில் மெனிங் சந்தை ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு
விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button