மலையகம்

அக்ரப்பத்தனை தபாற் காரியாலத்தின் முன் முதியவர்கள் படும் அவஸ்த்தை- யார் பொறுப்பு ?

முதியவர்களுக்கான மாதாந்த விசேட கொடுப்பணவை பெற்றுக்கொள்வதற்காக அக்ரப்பத்தனை பிரதான வீதியில் உள்ள உப தபாற் காரியாலத்தின் முன் வீதியின் ஓரத்தில் முதியவர்கள் பாதையோரத்தில் நீண்ட நேரமாக அமர்ந்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

70 வயதிற்கு மேற்பட்ட எமது தாய், தந்தையர்கள் அரசாங்கம் வழங்கும் உதவி தொகையை கௌரவமாக பெற்றுக்கொள்ள் முடியாத அவல நிலை.இந்த அவல நிலையை ஒவ்வொரு மாதமும் பார்த்துக்கொண்டு தமது வாகனத்தில் போகும் பிரதேசத்தின அரசியல் முக்கியஸ்தர்கள்.

அக்கரபத்னை தபாற் கந்தோர் நிறந்தர கட்டிடம் இன்றி, இடப்பற்றாக்குறைக்கு மத்தியில் பல வருடங்களாக இயங்கி வருகிருது.நகரத்துக்குள்ளேயே அறு,ஏழு இடங்கள் மாறியுள்ளது.புதிய கட்டிடம் ஒன்றை நிரந்தரமாக அமைத்துக்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனளிக்க வில்லை.பிரதேசத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் அவ்வப்போது வந்து தாம் இது தொடர்பில் முயற்சி செய்து வருவதாக சொல்வதோடு நின்று விடுகின்றார்கள் இதுவரைக்கும் எதுவும் சாதகமாக நடந்ததாக இல்லை.

இந்த தபாலகம் ஊடாக அக்கரபத்தனை பிரதேசத்தில் உள்ள சுமார் 24 தோட்டங்களுக்கு தபால் மற்றும் தொலை தொடர்பு தொடர்பான சேவைகள் இடம்பெறுகின்றன.

இங்கு பணியாற்றும் 12ஊழியர்கள் தங்களுடைய அவசர அவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு
நீர் மற்றும் கழிப்பிடம் போன்ற வசதிகள் கூட இல்லை.இந்த பிரதேச மக்களின் நலன் கருதி இந்த உப தபாற் அலுவலகத்திற்கான கட்டிடத்தை அமைக்க நண்பர்களே சம்பந்தப்பட்டவர்களை மீண்டும் வலியுறுத்துவோம்.

ஆர் .ரெ .அருட்செல்வம்

Related Articles

Back to top button