விளையாட்டு

அணி தலைவரின் சதத்துடன் வெற்றிபெற்ற நியூஸிலாந்து!

ஐ.சி.சி.உலகக்கிண்ண 12 ஆவது தொடரின் 25 ஆவது போட்டியில் நியூஸிலாந்து அணி மூன்று விக்கட்டுகளால் வெற்றிப் பெற்றுள்ளது.

நேற்று மாலை பர்மிங்காமில் ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்கள் முடிவில் 6விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது.

தென்னாபிரிக்க அணிசார்பில் அம்லா 55 (83) ஓட்டங்களையும்,வேன்டெர் டஸ்ஸன்67(64) ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் லொக்கி பெர்குஷன் 3 விக்கெட்டுக்களையும், ட்ரெண்ட் போல்ட், கிரேண்ட்ஹோம் மற்றும் மிட்செல் சாண்டனர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

242 என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய நியூஸிலாந்து 48.3 ஓவர்களில் 06 விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.அந்த அணி சார்பாக அணித்தலைவர் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க,கிரேன்டத்தோமே 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சாளர் மோரிஸ் 03 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

Related Articles

Back to top button