ஆன்மீகம்

அனுராதபுரம் – நீராவியடி அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்

வடமத்திய மாகாணம் – அனுராதபுரம் மாவட்டம் – நீராவியடி (திஸ்ஸவாவி) அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்

தாயாக இருந்துலகைக் காக்கின்ற அம்மா
தவிக்கும் நிலை தவிர்த்திடவே உன்கருணை வேண்டும்
தீயபகை கொடுமைகளைத் தடுத்தருள்வாய் நீயே
நீராவியடி அமர்ந்தருளும் எங்கள் முத்துமாரி

எல்லாள மாமன்னன் ஆண்ட நிலமமர்ந்த அம்மா
எல்லா நலனடைய உன் கருணை வேண்டும்
என்றும் ஆசிதந்து ஆதரிப்பாய் நீயே
நீராவியடி அமர்ந்தருளும் எங்கள் முத்துமாரி

அநுராதபுர மாநிலத்தில் ஆட்சி செய்யும் அம்மா
அனுதினமும் உடனிருந்து நலம் காக்க வேண்டும்
அச்சமில்லா நிம்மதியை எமக்கென்றும் அருளிடுவாய் நீயே
நீராவியடி அமர்ந்தருளும் எங்கள் முத்துமாரி

சூலத்தைக் கையிலேந்தி காவல் செய்யும் அம்மா
சூழவரும் நன்மைகளை எமக்காக்க வேண்டும்
சுதந்திரமாய் உரிமையுடன் வாழச் செய்வாய் நீயே
நீராவியடி அமர்ந்தருளும் எங்கள் முத்துமாரி

வாழ நல்ல வழி காட்டி வாழ்வளிக்கும் அம்மா
வற்றாத வளமுடனே நாம் வாழ வேண்டும்
சுற்றமென்றும் சீர் பெறவே அருளிடுவாய் நீயே
நீராவியடி அமர்ந்தருளும் எங்கள் முத்துமாரி

திக்கெங்கும் பரவி நின்று அருளுகின்ற அம்மா
திசைகளெட்டும் உன்பார்வை என்றும் படவேண்டும்
திகைத்து மனம் தளரும் நிலை அகற்றி அருளிடுவாய் நீயே
நீராவியடி அமர்ந்தருளும் எங்கள் முத்துமாரி.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button