செய்திகள்

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறப்பு மலையக அரசியலில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு-அரவிந்த குமார்…

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறப்பு மலையக அரசியலில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையகம் ஒரு சாணக்கிய தலைவனை இழந்து வேதனைப்படுவதாகவும் அவர் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் அமரர் சந்திரசேகரனின் இழப்பை மலையகம் சந்தித்தது போலவே தற்போது அமரர் ஆறுமுகம் தொண்டமானையும் இழந்து தவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறந்த ஆளுமை மிகுந்த ஒரு தலைமைத்துவத்தை மலையகம் இழந்துள்ளமை துர்பாக்கியம் எனவும் அரவிந்த குமார் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எனவே அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இழப்பால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுவதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button