செய்திகள்

ஆயுதங்களுடன் சந்தேகநபர்கள் 7 பேர் கைது!

நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஆயுதங்களுடன் சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திக்வெல்ல, போதரகந்த பகுதியில் துப்பாக்கியுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் வசமிருந்த பல்வேறு வகையிலான துப்பாக்கிகள் மற்றும் 27 ரவைகள், T56 ரக ரவைகள் 5, சட்டவிரோத கத்தி மற்றும் வாள் போன்றவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

போரகந்த, ஊருகமுவ பகுதிகளைச் சேர்ந்த 19, 33 மற்றும் 62 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button