செய்திகள்

இன்றும் தொடர்கிறது இணையவழி கற்பித்தல் புறக்கணிப்புப் போராட்டம்

ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும், இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை, இன்றுடன் ஒரு மாதத்தை அடைகின்றது.

வேதன பிரச்சினையை முன்வைத்து, ஆசிரியர் மற்றும் அதிபர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ஆசிரியர் சங்கங்கள் நேற்றைய தினம் அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் சிலவற்றுடன் கலந்துரையாடைலை முன்னெடுத்திருந்தன.

தங்களது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குமாறு கோரி, ஆசிரியர் சங்கங்கள் இந்த கலந்துரையாடலை நடத்தியுள்ளன.

கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து நாளைய தினம் சத்தியாகிரக போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள இணக்கப்பாடு எட்டப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Articles

Back to top button