செய்திகள்

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்காக விசேட APP மற்றும் QR Code ஆகியவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஒரு சினிமா தியேட்டரில் இருக்கும் ஒருவர் தடுப்பூச் சான்றிதழ் அட்டை இல்லாமல் அங்கு பிரவேசித்திருந்தால் அதற்கான பொறுப்பை சம்பந்தப்பட்ட முகாமைத்துவமே பொறுப்பெடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு எவருக்கும் உரிமை உள்ளது. எனினும் மற்றொருவரின் உயிரை எச்சரிக்கைக்கு உட்படுத்தும் உரிமை எவருக்கும் கிடையாது.

அதனால் முழுமையான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதுடன் பூஸ்டர் தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளுமாறும் தாம் நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button