செய்திகள்

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் மற்றுமோர் மகத்தான சேவை கனகநாயகம் தமிழ் தேசிய பாடசாலையில்..

ரா.கவிஷான்

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் விஞ்ஞான தீபம் செயற்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் (2022.01.29) நு/கனகநாயகம் தமிழ் தேசிய பாடசாலைக்கு ஸ்மார்ட் போர்ட் வழங்கும் நிகழ்வு சிறப்புற இடம்பெற்றது.

வீட்டுக்கொரு பட்டதாரியை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும் இவ்வமைப்பானது பல்வேறு பிரதேசங்களுக்கு தமது உதவிக்கரத்தை நீட்டுவது சிறப்பம்சமாகும்.

இன்று காலை 10.30 மணியளவில் மங்கள விளக்கேற்றும் வைபவத்தோடு ஆரம்பமான இந்நிகழ்வில் கனகநாயம் தமிழ் தேசிய பாடசாலையின் மாணவியின் வரவேற்பு நடனம் இடம்பெற்றதுடன் தொடர்ந்தும் அதிதிகளின் சிறப்புரை, கதம்பம், பேச்சு என இவ்வரங்கு அலங்கரிக்கப்பட்டது.

மலையகத்தில் பிறந்து வளர்ந்து வெளிநாடுகளில் சென்று தொழில்புரியும் உறவுகளின் ஒன்றினைந்த கரமாக இருக்கும் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பானது தமது சேவையினை பாடசாலைகளையும் மாணவர்களையும் மையப்படுத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்நிகழ்வில் அதிதிகள் கௌரவிக்கப்பட்டதுடன் அமைப்பின் தலைவர் ரமேஸ்வரன் அவர்களுக்கு நினைவு சின்னம் வழங்கி பாடசாலை நிர்வாகத்தால் பாராட்டப்பட்டனர்.

மாணவர்களுக்கான திறன் வகுப்பறை நிச்சயம் எதிர்காலத்தில் இவர்களின் கல்வி நடவடிக்கையில் பாரிய பங்களிக்கும் என்பதில் ஐயமில்லை.

Related Articles

Back to top button