கண்டிசெய்திகள்மலையகம்

கண்டியில் மீண்டும் நில அதிர்வு!

கண்டி − திகன உள்ளிட்ட சில பகுதிகளில் பாரிய சத்தத்துடன் மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

29ஆம் திகதி சம்பவம்

இதேவேளை,  கடந்த 29ஆம் திகதியும் இவ்வாறான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்திருந்தனர்.

அன்றைய தகவல்களின் பிரகாரம் அன்றிரவு 8.40 மணியளவில் பாரியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

. கண்டி-திகனை பகுதியிலேயே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் என அன்றைய செய்திகள் தெரிவித்தன. 

சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் நில நடுக்கத்தை உணர்ந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நான்கு நாட்களுக்குப் பின்னர், இன்று (02) காலை மீண்டும் நில அதிர்வதைப்போல உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

விசாரணைக்குழு அறிக்கை

இந்நிலையில், 30ஆம் திகதி அறிக்கையொன்றை விடுத்திருந்த விசாரணைக்குழு

கண்டி – தலாத்துஓயாவை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்ட அதிர்விற்கு 3 சம்பவங்கள் காரணங்களாக அமையலாம் என விசாரணைக்குழு அனுமானித்துள்ளது.

கற்குவாரியில் வெடி வைக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிர்வு இதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் உதய டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவ்வாறில்லை எனின் சுண்ணாம்பு கற்பாறை உடைந்து வீழ்ந்திருப்பதற்கான சாத்தியமுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விக்டோரியா உள்ளிட்ட அதனை அண்மித்த நீர்த்தேக்கங்களில் ஏற்பட்ட உயர் நீர் அழுத்தம்
மூன்றாவது காரணியாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிர்வினால் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.

கண்டி – தலாத்துஓயாவை அண்மித்த சில பகுதிகளில் நேற்றிரவு 8.34 மணியளவில் சிறியளவில் அதிர்வொன்று பதிவாகியது.

திகன, அளுத்ஹேன, அம்பக்கோட்டே, ஹாரகம மற்றும் குருதெனிய ஆகிய பகுதிகளிலேயே அதிர்வு பதிவாகியுள்ளது.

எனினும் இதுவொரு நிலநடுக்கம் அல்லவென புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்தார்.

இது குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கமொன்று ஏற்பட்டிருக்குமாயின், தமது பணியகத்தின் கீழுள்ள 05 மத்திய நிலையங்களில் அது குறித்து பதிவாகியிருக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி- Asian Mirror

Related Articles

Back to top button