விளையாட்டு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி!

துபாயில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி.

முதலில் பேட் செய்த பஞ்சாப் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களை குவித்தது. 

பஞ்சாப் அணிக்காக அதிகபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் 63 ரன்களை குவித்திருந்தார்.

இதனையடுத்து சென்னை அணி 179 ரன்களை விரட்டியது.

சென்னை அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் வாட்சனும், டூப்ளஸியும் இணைந்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். 

17.4 ஓவர் முடிவில் விக்கெட் ஏதும் இழப்பின்றி 181 ரன்களை குவித்து 14 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது சென்னை.

Related Articles

Back to top button