செய்திகள்

கொரொனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள லீசிங் மற்றும் கடன் பெற்றவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

கொரொனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள லீசிங் மற்றும் கடன் பெற்றவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொருளாதார மறுசீரமைப்பு வறுமை ஒழிப்பு தொடர்பிலான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

கொரொனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தினசரி வருமானம் பெறுவோர் மாதாந்த லீசிங் கொடுப்பனவு , மற்றும் மாதாந்த கடன் தொகையை மீளச்செலுத்துதல் உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது.

இந்த பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் , நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடன் உடனடியாக கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Back to top button