செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படும் மேலும் சில நோயாளர்கள் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் தொடர்பிலும் தொடர்ந்தும் அவதானத்துடன் உள்ளதாக தேசிய தொற்று நோய் வைத்தியசாலை குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படும் மேலும் சில நோயாளர்கள் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய செயற்படுமாறு பொதுமக்கள் தொடர்ந்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சனநெரிசல் மிக்க பகுதிகளை தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சளி மற்றும் தடிமன் ஏற்பட்டிருப்பின் அது தொடர்பில் அவதானமாக செயற்படுவதுடன முகக்கவசத்தை அணியுமாறும் சுகாதார பிரிவு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் அடிக்கடி சவர்க்காரமிட்டு கைகளை கழுவுமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை உணவு மூலம், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதில்லை என சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Back to top button