அரசியல்செய்திகள்

கோட்டாவுக்கு ஆதரவு – முடிவை அறிவித்தார் தொண்டா.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கொட்டகலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த காலங்களில் பல அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

இந்நிலையில் தோட்டத்தொழிலாளர்களின் 32 பிரச்சினைகளை முன்னிறுத்தி கோட்டாபய ராஜபக் ஷவுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரிக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீர அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இதனை மறுத்து  இ.தொ.கா.வின் மூத்த உதவித் தலைவரும் பொருளாளருமான எம்.ராமேஸ்வரன் அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.

கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தோடு வேட்பாளர்களுக்கான ஆதரவையும் ஒவ்வொரு கட்சிகளும் அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button