செய்திகள்

சபரியில் அதிகரிக்கும் தொற்றாளர்கள் – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம்.

சபரிமலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்திற்கொண்டு புதிய
வழிகாட்டு நெறிமுறைகளை கேரள சுகாதாரத் துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 26 ஆம் திகதி மண்டல பூஜைக்குப் பிறகு கோயிலுக்கு வரும்
பக்தா்கள் , பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவருக்கும் கொரோனா
பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் சபரிமலை கோயில்
திறக்கப்பட்டது.

அதன் பின்னா் கோயிலுக்கு வருகை தந்த பக்தா்கள் 51 போ் கோயில் பணியாளா்கள் 245
போ் உள்ளிட்ட 299 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து இரு மாவட்டங்களில் கொரோனா தொற்றின் வீரியம் அதிகரித்தது.

இதனை கருத்திற் கொண்டு கொரோனா பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி மண்டல பூஜைக்குப் பிறகு
கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் , பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள்
அனைவரும் கட்டாயம் கொரேனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் ஏற்கெனவே கொரோனா பரிசோதனை
மேற்கொண்டிருந்தாலும் அவா்கள் மீண்டும் பரிசோதனை உட்படுத்தப்படுவார்கள் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தா்கள் அனைவரும் தனிநபா் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும்
காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவா்கள் கோயிலுக்கு வருவதை தவிா்க்க
வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button