செய்திகள்

செவ்வாய்க்கிழமை கூடுகிறது கோப் குழு.

கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான செயற்குழுவின்
முதலாவது கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி பிற்பகல் 2.30க்கு இடம்பெறவுள்ளது.

கோபா எனப்படும் அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் எதிர்வரும் 23 ஆம்
திகதி இடம்பெறவுள்ளது.

இதன்போது, செயற்குழுக்களில் உறுப்பினர்களாக செயற்படும் பாராளுமன்ற
உறுப்பினர்களிடையே தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து செயற்குழு கூட்டத்திற்கு அழைக்கப்படவுள்ள அரச நிறுவனங்கள்
தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

பாராளுமன்ற ஊடகப்பிரிவு இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொது முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழு மற்றும் அரச கணக்குகள்
தெரிவுக்குழுக்களில் 44 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை
குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பொதுமக்களின் கோரிக்கைகள்
தொடர்பிலான செயற்குழுவின் முதலாவது கூட்டம் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றம் மீண்டும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பத்து மணிக்கு கூடவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button