செய்திகள்நுவரெலியாமலையகம்

டயகம சிறுமிக்கு நீதிகோரி கேம்பிரி மக்கள் ஆர்ப்பாட்டமும் விழிப்புணர்வு வீதி நாடகமும்…

டயகம சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கோரியும், சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியும், சிறுவர்கள் வேலைக்கமர்த்துவது தவிர்க்கப்பட வேண்டியும் இன்றைய தினம் (2021.08.01) கேம்பிரி முதல் மெராயா வரையில் மக்கள் போராட்டமும் விழிப்புணர்வு வீதி நாடகமும் ஒழுங்கு செய்யப்பட்டது.

இதன்போது மக்கள் அனைவரும் ஆரவாரமிட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். மதியம் 2.40 மணியளவில் கேம்பிரி மேற் பிரிவில் ஆரம்பமான ஆர்ப்பாட்டமானது கேம்பிரி கீழ்பிரிவை வந்தடைந்து மெராயா நகரை தாண்டி பாடசாலைக்கு அருகிலுள்ள மைதானத்திற்க்கு வந்தடைந்தது.

இதன்போது இளைஞர்கள் பலரும் ஆரவாரமிட்டு தங்களின் எதிர்ப்பை வெளியிட்டனர். அதுமட்டுமன்றி இதன்போது பறை இசைக்கப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதன்போது மலையக நலன் விரும்பும் பிடிதளராதே அமைப்பினர் இணைந்துக்கொண்டதுடன். கேம்பிரி இளைஞர்கள், வள்ளுவர் நற்பணி மன்றம், பொதுமக்கள் இதனை ஏற்ப்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது 200 க்கும் அதிகமானோர் பங்குபற்றியதுடன். அனைவரும் முகக்கவசம் அணிந்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பங்கு பற்றினர்.

இறுதியாக நடைபெற்ற வீதிநாடக்த்தின் போது பார்வையிட்ட பலரும் கண்கலங்கியதுடன், இனிவரும் காலங்களில் சிறுவர்களையும் தங்களின் பிள்ளைகளையும் வேலைக்கமர்த்த மாட்டோம் என்றும் உறுதிகொண்டனர்.

கவிஷான்

Related Articles

Back to top button