உலகம்செய்திகள்

தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்கள் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை : அமெரிக்க ஜனாதிபதி

முழுமையாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட அமெரிக்க மக்கள் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில்,”விதிகள் மிக எளிமையானது. தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் அல்லது தடுப்பூசி செலுத்தும் வரை முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்,” என்று தெரிவித்தார்.

அந்நாட்டில் 35 சதவீத மக்கள் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் இந்த புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லலாம். இருப்பினும் கூடிய எண்ணிக்கையானோர் ஒன்றுகூடும்போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மக்கள் தொகையில் இதுவரை 35 சதவீதம் பேர் தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளதாகவும், 40 சதவீதமானோர் முதல் செலுத்துகையை மாத்திரம் பெற்றுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கொரோனாவினால் வயோதிபர்கள் உயிரிழக்கும் தொகையும் 80 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் வீரியமடைந்து வருகின்றது. உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தொற்றால் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button