செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக எழுபதுக்கும் மேற்பட்டோர் கைது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரையான
காலப்பகுதியில் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாமை, மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட மூவர்
கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த மாதம்
14 ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button