செய்திகள்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அபோட்சிலி தோட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்கிய அனுஷா …

ஹட்டன் அபோட்சிலி தோட்டத்தில் நேற்றிரவு (02) ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரிலேயே சென்றதுடன் அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உலர் உணவு தேவையையும் பூர்த்தி செய்தார் சட்டத்தரணியும், நுவரெலியா மாவட்ட சுயேட்சை வேட்பாளருமான அனுஷா சந்திரசேகரன்.

மேலும் இவர்களுக்கு அவசியமான அன்றாட உணவு தேவைகள் , உடைகள் என்பன குறித்த தோட்ட இளைஞர்களால் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டிருந்தது.

குறித்த தோட்டத்தின் முகாமையாளரை சந்தித்த போது அவர் குறித்த லயன் குடியிருப்பின் கூரை தகரங்களை புனரமைத்து தருவதாக கூறினார். மக்கள் இவ்வாறான அனர்த்த நிலையை சந்திக்கும் போது முகாமையாளர்கள் தன் தோட்டத்தில் பணிபுரியும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயற்படுவது, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிடுவது பாராட்டுக்குரிய விடயமென மக்களின் சார்பில் அவருடைய ஒத்துழைப்பிற்கு நன்றியையும் தெரிவித்ததுடன்,

இந்த கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கும் இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகள் அதிகமாகவே இருக்கின்றன. ஆகவே எல்லாவற்றிலும் அரசியல் செய்யாது மக்களின் நலனில் ஓரளவேனும் அக்கறை கொண்டு அவர்களிடம் சந்தா வாங்கும் ஏனைய தொழிற்சங்க தலைவர்கள் மாற்று நடவடிக்களை மேற்கொள்ள முன்வருவது சிறந்தது எனவும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button