செய்திகள்

நாட்டில் மேலும் 252 பேருக்கு கொரோனா.

நாட்டில் மேலும் 252 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் தொற்று கண்டறியப்பட்டவர்கள் ஏற்கனவே தொற்றுடன் அடையாளங்
காணப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில்
பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 740ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26ஆயிரத்து
290ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 406 பேர் வீடுகளுக்குத்
திரும்பியுள்ள நிலையில் இதுவரை 19 ஆயிரத்து 438 பேர் தொற்றிலிருந்து
மீண்டுள்ளனர்.

மேலும் தொற்றுக்குள்ளான ஆறாயிரத்து 975 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில்
சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் நேற்று உயிரிழந்திருந்ததுடன் ,நாட்டில்
கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button