செய்திகள்

பண்டிகைக் காலத்தில் உணவுப் பொருட்களை சதொச விற்பனை நிலையங்களில் சலுகை விலையில்..

பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்குத் தேவையான உணவுப் பொருட்களை ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என அதன் தலைவர் றியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப்பொருட்கள் அடங்கிய சலுகைப் பொதியை சதொச விற்பனை நிலையங்கள் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

இது தவிர மேலும் 27 பொருட்கள் விசேட சலுகை விலையின் கீழ் விற்பனை செய்யப்படுகின்றன. நாட்டரிசி, வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி என்பவற்றை போதியளவில் கொள்வனவு செய்து கொள்ள முடியும். இம்மாதம் 13ம் 14ம் திகதிகள் தவிர்ந்த ஏனைய அனைத்துத் தினங்களிலும் சதொச விற்பனை நிலையம் திறந்திருக்கும்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button