அரசியல்செய்திகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக 1000 ரூபாய்..

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட இருக்கின்றது. இது இ.தொ.கா க்கு கிடைத்த வெற்றி என்பதை இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமாகிய ஜீவன் தொண்டமான் சௌமிய பவனில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில்  தெரிவித்துள்ளார்.
  

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,சம்பள நிர்ணய சபையின் 1000  ரூபாய் கொடுப்பனவு தீர்மானத்திற்கு எதிராக எதிரனி தரப்பு தாக்கல் செய்திருந்த மனு நேற்று உயர் நீதி மன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வர்த்தமானி அறிவுறுத்தளுக்கு எதிரான மனு மீதான விசாரணை முதற்கட்ட விசாரணையை அடுத்து கம்பனி தரப்பு கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்  இம்மாதம் 27ம்  திகதி வரை ஒத்திவைத்தது.

இதன் காரணமாக வர்த்தமானி அறிவுறுத்தலில் குறிப்பிட்டுள்ளவாறு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெறக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஏற்கனவே நுவரெலியா அரச பெருந்தோட்ட யாக்கம் ஒன்றின் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இது  இ.தொ.காவின் முயற்சிகளுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.

இதேவேளை ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட  தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வா, பெருந்தோட்ட கைத்தொழில்  அமைச்சர் ரமேஷ் பத்திரன அவர்களுக்கு  இ.தொ.கா சார்பாக நன்றிகளை தெரிவிக்கின்ற அதேவேளை குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இதுவிடயத்தில் பொறுமையாக இருந்து எம்மோடு கைகோர்த்து இருந்தமையால் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் . 
 

இச்செய்தியாளர் மாநாட்டில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன்,பிரதி தலைவர் அனுஷியா சிவராஜா, பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், இ.தொ.கா நிர்வாக உபத்தலைவரும், சட்டத்தரணியுமான மாரிமுத்து, மற்றும் உபதலைவர் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

இ .தொ .கா ஊடக பிரிவு

Related Articles

Back to top button