மலையகம்

பொகவந்தலாவை பகுதியில் மர்மமாக கொல்லப்படும் நாய்கள்?

ஒரு தனிமனித உணர்வூ சமூக உணர்வாக மாறும் என்ற எத்தனிப்போடு இந்த பதிவை தொடங்குகின்றேன்.

“தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் இந்த ஜகத்தை அழித்திடுவோம்” என்கிறார் பாரதி வாழ்ந்த தமிழன் இன்று அந்த உணவில் ஐந்து அறிவு கொண்ட மிருகங்களுக்கு நஞ்சு கலக்கின்றான் என்பதில் நானும் மனிதன் என்பதில் வெட்கம் கொள்கின்றேன்.

பொகவந்தலாவ பிரதேசம் அண்மைகாலமாகவே சில அரசியல் வாதிகளினதும் மற்றும் பெயர் போன வர்த்தகர்களினதும் போதை வஸ்து பதுக்கும் இடமாகவும் இரவு வேலைகள் இவை கைமாற்றவும் படுவது பலரும் அறிந்ததே.

இதற்கு பெரும் தடையாக இந்தப்பகுதியில் இருக்கும் கட்டகாலி நாய்கள் இருக்கின்றன.குறித்த நாய்கள் குறிப்பிட்ட சிலரால் உணவுகளில் நஞ்சுகள் கலந்து இந்த நாய்கள் கொல்லப்படுகின்றன.

மேலும் இந்த நஞ்சு கலந்த உணவு பொதிகள் பொது இடங்களில் வீசப்படுவதால் கட்டாகாலி நாய்கள் மட்டும் இன்றி அதனை உண்ணும் பறவைகள் ஏனைய உயிரினங்களும் இறந்துவிடும் என்பதனை இவர்கள் உணரவில்லை போலும்.

பெயரளவில் இந்த நாட்டில் சகல உயிர்களும் சமண்.காட்டில் வாழும் மனித உயிர்க்கு ஆபத்தான புலியை கொல்வது தவறு,மானை கொல்வது தவறு,கொடிய விஷங்களை கொண்ட பாம்புகளை கூட பாதுகாக்கும் அமைப்புக்கள் இருக்கும் போது இந்த கட்டாகாலி நாய்களை பாதுகாக்கும் அமைப்புகள் இதனை பொருட்படுதாதன் காரணம் தான் என்ன?

நாட்டில் அண்மை காலத்தில் எவராலும் மறக்க முடியாத சம்பவம் தான் “ஈஸ்ட்டர் பெருநாள்” குண்டு வெடிப்பு அதற்கு பிறகு பல குண்டுகளை இராணுவ வீரர்களுக்கு வெடிக்கும் முன்னர் காட்டி தந்தது இந்த நாய்கள் தான். ஆனால் யார் பராமரிப்பும் அற்ற கட்டாகாலி நாய்கள் சாகடிக்கப்படுவது மட்டும் ஏன் யார் கண்களுக்கும் தவறாக படவில்லை.

ஒரு வேலை உணவுக்கும் ஓடி திரியும் இந்த நாய்கள் கொல்லப்படுவதை யாருமே பொருட்படுத்த நேரம் இல்லை நாம் போடும் உணவுகளை திண்று நாம் கால்களில் சுற்றி திறிவதால் அதன் உயிர் மீது நமக்கு கவலை இல்லை மனிதன் மிருகமாக மாறிவிட்டான் பொகவந்தலாவ பிரதேசத்திலும் இது தொடர்பாக பல அரசாங்க அதிகாரிகளிடம் அறிவித்தும் பயன் இல்லை,இரவு வேலைகள் இவை சத்தமிட்டு கத்துவதால் தவறுகளை இவகுவாக செய்ய முடியாமையால் இவைகள் சாகடிக்கப்படுகின்றன நாம் சந்தே கமடைகின்றோம்.இப் பிரதேச மக்களும் இதனை பெரிய விடயமாக பொருட்படுத்தவில்லை காரணம் இவைகள் கட்டாகாலி நாய்கள் என்பதனால்.

ஆனால் இவ் நாய்கள் எத்தகைய தவறுகளை தடுக்கின்றன என்பதனை சிலர்கள் அறிவர். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு அணைவரும் இதனை வாசிப்பதோடு நின்றுவிடாமல் இதை தடுக்க முன்வாருங்கல் சமூகம் என்பது நாம் மட்டும் அல்ல அணைத்தும் கலந்தது தான்.மனிதன் மீது நம்பிக்கை கொண்டு வாழும் உயிர்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.பொகவந்தலாவ பிரதேச கட்டாகாலி நாய்களுக்கு இடம்பெறும் மனித வன்முறைகளை தடுப்போம்.

தமிழ் நேசன்

Related Articles

Back to top button