செய்திகள்

பொதுமக்களுக்கு எந்நேரமும் உதவி வழங்க தயார் – பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறுகிறார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கான உதவிகளை எந்நேரத்திலும் வழங்குவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் தயார் நிலையில் உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்காக பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் 149 பேர்  தயார் நிலையில் இருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

அனர்த்தங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி  0112 454 576 அல்லது 0112 587 229 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டு அனர்த்தங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button