...
நிகழ்வுகள்மலையகம்

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் மொகான்ஜி நிறுவனம்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக தலைநகர் கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் மொகான்ஜி நிறுவனம் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.

கடந்த இரு வாரங்களாக
பதுளை, திருகோணமலை, குருணாகலை, மாத்தளை, கண்டி, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள வறுமை கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு உலருணவு மற்றும் உடுதுணிகளை வழங்கி வருகிறது.

இவ்வமைப்பின் இலங்கைக்கான பிரதநிதி ஜீவரட்ணம் சுரேஷ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உதவிகள் இலங்கைக்கு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிவாரண பொருட்களை குறிப்பிட்ட மாவட்டங்களில் பொது அமைப்புகளின் ஊடாக மிகவும் வறிய குடும்பங்களை தெரிவு செய்து முறையாக பகிர்தளித்தனர்.

நுவரெலியா மாவட்டத்தில் மனித உரிமைகளுக்கான முதலுதவி நிறுவனமான சுயசக்தி நிறுவனம் மேற்படி நிவாரண பொருட்களை பொறுப்பேற்று அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்திருந்தனர்.

அத்தோடு மலையக பெருந்தோட்ட சமூகத்தின் அடையாளமாக விளங்கும் பாரம்பரிய கலைகளை பாதுகாக்கும் பொருட்டு அக்கலைகளை நிகழ்த்தும் கலைஞர்களுக்கு தேவையான பட்டு புடவைகளையும் தெரிவு செய்யப்பட்ட சில தோட்டங்களுக்கும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அ.ரெ.அருட்செல்வம்)

Related Articles

Back to top button


Thubinail image
Screen