செய்திகள்

மடுல்சீமை பகுதியை சேர்ந்த இளைஞன் களனி பகுதியில் கொலை..?

பதுளை, பசறை – மடுல்சீமை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் , களனி பகுதியில்  கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் 15/07/2020 அன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞனின் சடலம் இராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் கூறினர்.

களனி தலவத்த பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தொழில் புரிந்த இரண்டு இளைஞர்களிடையே ஏற்பட்ட வாய்த்த தர்க்கத்தினால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு இளைஞர்களும் ஹோட்டலின் அருகிலுள்ள அறையில் தங்கியிருந்த போதே நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பசறை, மடூல்சீமை பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அதே பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞனொருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனை மஹர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 14 நாட்களுக்கு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் களனி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button