செய்திகள்

மலையக கல்வி வரலாற்றில் ஒரே தடவையில் 113 பேர் பட்ட மேற் கல்வி டிப்ளோமா…

தேசிய கல்வி நிறுவக பட்ட மேற் கல்வி டிப்ளோமா கற்கை நெறியினை , கொட்டகலை பிராந்திய கற்கை நிலையத்தில் தொடர்ந்த ஆசிரிய மாணவர்கள் 113 பேர் சித்தி பெற்றுள்ளனர்.

இந்த சாதனை தொடர்பாக கற்கை நெறியின் இணைப்பாளர் எம். எச். எம் ஜவ்பர் தெரிவிக்கையில்.

மலையக கல்வி வரலாற்றில் ஒரே தடவையில் 113 பேர் பட்ட மேற் கல்வி டிப்ளோமா பட்டம் பெறுவது இதுவே முதற் தடவை என்று கருதுகின்றோம்.
இவர்களில் ஐவர் Distinction (சிறப்புச்)சித்தியையும் 28 பேர் Merit ( திறமைச்)சித்தியையும் பெற்றுள்ளனர்.

இச் சாதனைக்கு வழிகாட்டியாக விளங்கிய கற்கை நெறியின் தேசிய இணைப்பாளர் ஷாஜஹான் சிபான் அவர்களுக்கும் எமது கற்கை நிலையத்தின் சகல விரிவுரையாளர்களுக்கும் கொட்டகலை அரசினர் கலாசாலை அதிபர் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

எங்களிடம் கற்ற இந்த வாண்மைத்துவ ஆசான்கள் நமது கல்விப் புலத்தில் சாதனை புரிவர்.

அவர்கள் நாளை ஏற்கவிருக்கும் தலைமைத்துவத்தை காண ஒரு தந்தையைப்போல நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம்.இவர்கள் நேர்மையோடும் சமூக அக்கறையோடும் பயணிப்பார்கள் என்று உறுதியோடு நம்புகின்றோம்.

கற்கை நிலைய இணைப்பாளர் என்ற வகையில் பயணத்திற்கு தோள் தந்த அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என தெரிவித்தார்.

Related Articles

Back to top button