மலையகம்மாத்தளை

மாத்தளை – செங்கலகடை தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் .?

மாத்தளை, செங்கலகட தோட்ட மக்கள் இன்று (21) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுற்றுலாத்துறையின் மையமாக விளங்கும் செங்கலகட பகுதியை குறித்த தோட்ட அதிகாரிகள் கையகப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என சுட்டிக்காட்டியே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சூழ்ச்சி திட்டத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன் போது சுட்டிக்காட்டினர்.

சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடமாக செங்கலகட குளம் அமைந்துள்ள பகுதி விளங்குகின்றது.

இப்பகுதியையே ஆக்கிரதித்து – போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது.

இவ்வாறு நடைபெற்றால் சுற்றுலாத்துறையை நம்பியிருந்தவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் எனவும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Back to top button