செய்திகள்

முல்லைத்தீவில் வாள்வெட்டு – 3 பிள்ளைகளின் தந்தை படுகாயம்

முல்லைத்தீவு பாண்டியன் குளம் – கரும்புள்ளியான் பகுதியில் நேற்று நள்ளிரவு இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையொருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காயங்களுடன் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மல்லாவி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button