செய்திகள்மலையகம்

ஹட்டன் மற்றும் பிற மாவட்டங்களுக்கான பஸ் போக்குவரத்து சேவைகளில் மந்த நிலை?

கொழும்பிலிருந்து ஹட்டன் மற்றும் நுவரெலியாவிற்கு செல்லும் பஸ்களுக்காக பொதுமக்கள் அதிகளவில் பேரூந்து தரிப்பிடத்தில் காத்துக் கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வெசாக் பூரணை தின விடுமுறைகள் இன்றிலிருந்து 3 நாட்களுக்கு அரச விடுமுறையாக வழங்கப்பட்டுள்ளதால், வெளி மாவட்டங்களிலிருந்து வந்து, கொழும்பில் தொழில் புரிவோர் தங்களது வீடுகளுக்குச் செல்வதற்காக புறப்பட்டிருக்கும் நிலையில், போதிய பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படாமையினால், பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

பல்லின மக்களும் தங்கள் வீடுகளுக்குச் செல்வதற்காக, பேரூந்து தரிப்பிடத்தில் பல மணி நேரமாக காத்துக் கொண்டிருக்கின்ற அதேநேரம் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button