செய்திகள்

80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில் நேற்றைய நாளில், 84,220 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, 12,465 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 48,989 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், 9,519 பேருக்கு அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டன.

1,010 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 12,020 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

மொடர்னா இரண்டாம் தடுப்பூசி 217 பேருக்கு செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen