சிறப்புசெய்திகள்

10 இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்…

10 இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இன்று காலை 9.49 க்கு அமைந்த சுபநேரத்தில் அநுராதபுரம் மஹமெவ்னா பூங்காவில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சர் மற்றும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

இதனுடன் இணைந்த வகையில் நாடு முழுவதும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்காக பிரதேச செயலகங்கள், பாடசாலைகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றையும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

ஒரு வார காலத்திற்கு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பசுமையான சுற்றாடலை உருவாக்கும் நோக்கில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நாட்டின் வன அடர்த்தியை 32 வீதம் வரை அதிகரிப்பது இதன் நோக்கமாகும் எனவும் சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சர் மற்றும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் 1 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக வனசீவராசிகள் வளங்கள் அமைச்சர் மற்றும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
image download