மலையகம்
100 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து : மூவர் படுகாயம்
நுவரெலியா – லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், தலவாக்கலை – டயகம பிரதான வீதியில் நாகசேனை நகர பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரும் படுகாயடைந்த நிலையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்து தொடர்பாக லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.