செய்திகள்

100 சிறுவர் ஆபாசக் காணொளிகள் -படங்கள் கண்டியைச் சேர்ந்தவரால் பதிவேற்றம்..

காணாமல் போன மற்றும் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுவர்களுக்கான தேசிய நிலையம் என்ற விஷேட பிரிவை நிறுவிய பின், கண்டியைச் சேர்ந்த ஒருவர் சுமார் 100 சிறுவர்  ஆபாசக் காணொளிகளையும் படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. 
சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை கண்காணிக்கும் வகையில் கடந்த மாதம் கொழும்பிலுள்ள சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்தில் புதிய பிரிவு ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்டிஐஜி அஜித் ரோஹண தெரிவித்தார். 
இவ்வாண்டு 17ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆபாசக் காணொளிகள் மற்றும் சிறுவர் ஆபாசப் படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. 
விசாரணையின் பின்னர் தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக சந்தேக நபரின் ஐபி முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் அவர்களிடம் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

நன்றி தினக்குரல் 

Related Articles

Back to top button