மலையகம்

1000 ரூபா போராட்டத்துக்கு நானும் ஆதரவு சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க?

தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை வேதனம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படல் வேண்டுமென்பது நியாயமான கோரிக்கையென, சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆயிரம் ரூபா அடிப்படை வேதனம் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெருந்தோட்ட மக்களின் கோரிக்கையானது நியாயமான. நானும் அதற்கான ஒத்துழைப்பை வழங்குவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல கலைவாணி தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தோட்டதொழிலாளர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தோட்டத்தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா கோரிக்கையை முன்வைத்து போராட்டம் செய்கின்றனர். அவர்களின் இப்போராட்டம் நியாயமானது. சபரகமுவ ஆளுனரால் அவர்களுக்கு சார்பாக பேச முடியாது. எனினும் தம்ம திசாநாயக்க ஆகிய நான் பேசுவது உங்களுக்கு சார்பாக.

தனிபட்ட ரீதியில் எனது கருத்தானது தோட்டதொழிலாளகளாகிய உங்களுக்கு சார்பானது. உங்களுடைய போராட்டம் நியாயபூர்வமானது. அமைச்சர் கூறியபோது நினைவிற்கு வந்த ஒன்றை உங்களிடம் கூறுகிறேன். இக்குழந்தைகள் தோட்டத்தில் நிரந்தரமாக தங்கும் அவசியமில்லை. எனினும் இவர்கள் தலைநகருக்கு வரவேன்ன்டும் கொத்து பாராட்டக்கார்களாகவோ அல்லது கடைகளில் கூலிவேலை செய்பவர்களாகவோ அல்ல.

இவர்கள் கௌரவாமான பிரஜைகளாக. நாட்டின் தலைநகரில் மட்டுமல்ல நாடுமுழுதும் உலாவர வேண்டும். அதன் காரணமாகவே நாங்கள் ஏனைய பாடசாலைகளைப் போலவே தோட்டப்புற பாடசாலைகளிலும் கல்வியை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம் எனவும் சபரகமுவ ஆளுநர் தெரிவித்தார்.

இதன்போது பிரதி அமைச்சர் ராதாகிருஷ்ணன் உற்பட ஏனைய அரசியல் தலைவர்ல்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button