அரசியல்செய்திகள்

1000 ரூபா வழங்க முடியாவிடின் தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளிக்குமாறு கோரிக்கை ..?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்கி சாதாரணத்தை நிறைவேற்ற முடியாவிடின் தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளிக்குமாறு பகிரங்கமாக கம்பனிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை நேற்று சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு சாதாரணத்துவத்தை ஏற்படுத்த 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய தேர்தல் வாக்குறுதியளித்திருந்தார். தோட்டத் தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இன்று தொழிலாளர்களாக அவர்கள் பெருந்தோட்டங்களில் பணிப்புரிய தயார்நிலையில் இல்லை.

நகர்புற தொழில்களை நோக்கி அவர்கள் நகர்ந்து வருகின்றனர். இளைஞர்கள் பெருந்தோட்டத்துறையில் பணிப்புரிய தயார்நிலையில் இல்லை. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அதிகமாக உள்ளன. பெருந்தோட்டத்துறை அந்நிய செலாவணி மற்றும் சுற்றுவாத்துறையில் பாரிய தாக்கத்தை செலுத்துகிறது.

‘சிலோன் டீ’ உலகளாவிய ரீதியில் பிரசித்தமானதுடன் எமது சுற்றுலாத்துறைக்கும் ஊக்கத்தை கொடுக்கிறது. இவர்களை இத்தொழில்துறையில் தக்கவைக்க கடந்தகால்ததில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இங்குள்ள தொழிலாளர்களும், இளைஞர்களும் வேறு நகரங்களில் பணிப்புரியுகின்றனர். மதுபானம் மற்றும் வேறு வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே, இத்தொழில்துறையும் இங்குள்ள இளைஞர்களையும் பாதுகாக்க வேண்டும். அதனால் துரிதமாக 1000 ரூபா சம்பள உயர்வை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

தொழில் பிரச்சினையுடன் தற்கொலைகளும் அதிகம் இடம்பெற்று வருகின்றன. நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடையும் சந்தர்ப்பதில் இங்கு தற்கொலைகள் இடம்பெறுவது பாரிய பிரச்சினையாகும். இதனை தடுக்க வேண்டும். போதுமான தேயிலை உற்பத்தி இல்லை. உலகளாவிய கேள்விக்கு ஏற்ப எம்மிடம் உற்பத்திகள் இல்லை. தொழிலாளர்கள் போதாமையே இதற்கு காரணமாகும்.

பெருந்தோட்ட கம்பனிகள் பாரிய இலாபத்தை பெறுகின்றன. ஆனால், தொழிலாளர்களுக்கு 300 ரூபா சம்பள உயர்வுக்கு எதிர்ப்பை வெளியிடுகின்றனர். தொழிலாளர்களுக்கு சாதாரணத்துவத்தை பெற்றுக்கொடுக்க முடியாவிடின் அரசாங்கத்திடம் பெருந்தோட்டத்துறையை கையளிக்குமாறு கம்பனிகளுக்கு பகிரங்க கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

Related Articles

Back to top button