பண்டாரவளை கல்வி வலயத்திற்குட்பட்ட பூனாகல தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பாடசாலை வளாகத்தில் வைத்து (10) வெளிநபர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து இன்று (12) பண்டாரவளை நகரில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது குறித்த சம்பவத்தோடு தொடர்புபட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோஷங்கள் எழுப்பினர். இதேவேளை இன்றைய தினம் குறித்த பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.