செய்திகள்

துப்பாக்கி ரவைகளுக்கும் தமக்கும் தொடர்பில்லை – ஹிஸ்புல்லாஹ்..

தமது அலுவலகத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள், தமக்குப் பாதுகாப்பளிக்கும் காவல்துறையினருக்கு உத்தியோக பூர்வமாக வழங்கப்பட்டவையென கிழக்கு மாகாண ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் காத்தான்குடி அலுவலகத்தில், நேற்றைய தினம் காவல்துறையினர் திடீர் தேடுதலை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, ரி_56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் 40 கைப்பற்றப்பட்டிருந்தன.

அத்துடன், அலுவலகத்திற்குப் பொறுப்பாக இருந்த நபரொருவரும் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்த கிழக்கு மாகாண ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

இந்த அறிக்கையிலேயே, நேற்றைய தினம் கைப்பற்றப்பட்ட ரவைகள் குறித்த தெளிவூட்டலை அவர் வழங்கியுள்ளார்.

ரி_56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் அந்த 40 ரவைகளுக்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்புமில்லையென கிழக்கு மாகாண ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தற்கொலை குண்டுதாரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் அண்மையில் சமூக வலை தளங்களில் பலரின் விமர்சனத்துக்குள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com