...
நுவரெலியாமலையகம்

11 இளைஞர்கள் நோர்வூட் பொலிஸாரால் கைது!

தனிமைப்படுத்தும் சட்ட விதிகளை மீறி கால்பந்தாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர் .

குறித்த சம்பவம் இன்று நேர்வூட் பொலிஸ் பரிவுக்குட்பட்ட நோர்வூட் போட்ரி மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

விளையாட்டு மைதானத்தில் தனிமைப்படுத்தும் சட்ட விதிகளை மீறி அயரபி மற்றும் போட்ரி தோட்டங்களைச் சேர்ந்த இருவது வயத்திற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட சுமார் 40 இற்கும் மேற்பட்டவர்கள் கால் பந்தாட்டத்தில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகிய தகவலினையடுத்தே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது 40 இளைஞர்கள் ஒன்றுகூடியிருந்ததாகவும் பொலிஸாரை கண்டு ஏனையவர்கள் ஓடி தப்பியதாகவும் இந்த சுற்றுப்போட்டியினை ஒழுங்கு செய்த நபர் தலைமறைவாகியிருப்பதாகவும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தார்.

– சுந்தரலிங்கம்

www.malainaadu.lk

Related Articles

Back to top button


Thubinail image
Screen