நமுனுகுலை கனவரல்ல C.V.E பகுதியில் பாடசாலை மாணவி ஒருவருக்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வைத்தியரிடம் பரிசோதனைக்கு உட்படுத்திய போது வைத்தியரினால் மூக்கு கண்ணாடி அணிய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
பொருளாதார நெருக்கடியால் வாழும் குறித்த சிறுமியின் பெற்றோருக்கு மூக்கு கண்ணாடியை பெற்றுக் கொடுப்பதில் சிரமமான நிலையில் குறித்த தோட்டத் தலைவர் முருகதாஸினால் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசனையின் பேரில் குறித்த மூக்குக் கண்ணாடி பாராளுமன்ற உறுப்பினரின் பசறை இணைப்பு அதிகாரி தமிழ்ச்செல்வனின் சொந்த பணத்தினால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த வருடம் பாடசாலை செல்லவிருக்கும் சுமார் 15 பாட சாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு இன்று கனவரல்ல C.V.E சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றதோடு இதில் தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் மற்றும் பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ராமு தனராஜா