நானுஓயா கிளாசோ தோட்டத்தில் முதலாவது பட்டதாரிக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று (16/12/22) கிளாசோ தோட்டத்தில் இடம்பெற்றுது.
எம் .நாராயனன் ,ஆர்.புகனலோஜினி ஆகியோரின் புதல்வரான புண்ணியசெல்வனுக்கே நேற்று இவ்வாறு பொதுமக்களால் வீரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர் அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் அரசியல் அறிவியல் மற்றும் பொதுக் கொள்கையில் இளங்கலை பட்டத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது ஆரம்ப கல்வியை : நு/ கிளாசோ த.வி, நானுஓயாவிலும் இடைநிலை, உயர்க் கல்வியை :நு/ நாவலர் கல்லூரியிலும் கற்றுள்ளார்.
நிஷாந்தன், கவிதாசன்